Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Wednesday, 14 February 2018 - 21:54
அர்ஜூன மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு
206

Views
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகின்றது.

சர்ச்சைக் குரிய பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் தற்போது சந்தேகத்திற்குரியவராக அர்ஜூன மகேந்திரன் பெயரிடப்பட்டுள்ளார்.

அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜனரத்ன, கடந்த 5ஆம் திகதி அழைப்பாணை பிறப்பித்திருந்திருந்தார்.

இதற்கமைய, 10 நாட்கள் கால அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் இதுவரையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.

இதனிடையே, இந்த வழக்கின் சந்தேகத்திற்குரியவர்களான பெர்பெச்சுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
5,997 Views
13,664 Views
12 Views
781 Views
169 Views
41,794 Views
Top