அமெரிக்க ஜனாதிபதி விதிமுறைகளை இறுக்கமாக்க வேண்டும்

Sunday, 18 February 2018 - 14:23

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்க புலனாய்வுப் பிரிவு எப்.பி.ஐ. இற்கு புளோரிடா பாடசாலை தாக்குதலை மேற்கொண்ட 19 வயதான மாணவர் குறித்த செயல்பாடுகள் குறித்து தகவல்கள் முன்னரே அறிந்திருந்த போதிலும் உரிய நடவடிக்கையினை எடுக்க தவறியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இந்த அமைப்பு ட்ரம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையுடன் ரஷ்யாவை சம்பந்தப்படுத்தும் நடவடிக்கையினை நீருபிக்கும் பணிக்காக அதிக நேரத்தை செலவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். 
 
புளோரிடா பாடசாலை துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்கள் பலியாகினர்.
 
கடந்த 2012ஆம் ஆண்டு பிறிதொரு அமெரிக்க பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். 
 
கடந்த வாரம் இடம்பெற்ற புளோரிடா தாக்குதலை அடுத்து அமெரிக்காவில் சுடுபடைக்கலன் தொடர்பாக கட்டுப்பாட்டை கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில், புளோரிடா துப்பாக்கிப் பிரயோகத்தில் தப்பிய மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளதுடன் அமெரிக்க ஜனாதிபதி சுடுபடைக்கலன் தொடர்பான விதிமுறைகளை இறுக்கமாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips