அரசியல் பயணத்தை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன்

Wednesday, 21 February 2018 - 13:30

+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
நடிகர் கமல்ஹாசன் இன்று தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, இராமேஸ்வரத்தில் உள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் இல்லத்திற்கு சென்ற அவர், அப்துல் கலாமின் சகோதரர் முகம்மது முத்துமீரான் மறைக்காயரை சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கல்விகற்ற மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையை சென்று பார்வையிட்டார்.

கமல்ஹாசன் அரசியல் நோக்கத்திற்காக வருகைதந்திருந்தமையினால் இராமேஸ்வர மாவட்ட ஆட்சியாளரால் அவருக்கு பாடசாலைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனிடையே, கமல்ஹாசன் இன்றைய தினம் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததை அடுத்து, இந்தியா முழுவதிலும் இருந்து அரசியல் விளையாட்டு சினிமா பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை பதிவுசெய்துவருகின்ற அதேவேளை, மறுதரப்பினர் எதிர்ப்பினையும் பதிவுசெய்துவருகின்றனர்.

அரசியல் பயண ஆரம்பத்துடன், கமல்ஹாசன் இராமேஸ்வர மீனவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் மாலை வேளையில் மதுரையில் கட்சி ஆரம்பம் தொடர்பான மாநாடு இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கமல்ஹாசனின் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips