தியத்தலாவை பேரூந்து அனர்த்தம் - தொடரும் விசாரணைகள்

Wednesday, 21 February 2018 - 18:33

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தியத்தலாவ – கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பேரூந்து ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்புடனான தீப்பரவல் குறித்து அரச பகுப்பாய்வாளர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

இதுதவிர சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் இணைந்து விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.45 அளவில் ஏற்பட்ட இந்த அனர்தத்தில் 19 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 7 இராணுவத்தினரும் 5 வான்படை வீரர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு இராணுவ வீரர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips