11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றின் அதிரடி

Thursday, 22 February 2018 - 13:22

11+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், கடற்படை முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி தஸநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து நீக்குமாறு விடுத்த கோரிக்கை இன்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 8ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இந்த விசாரணையை குற்ற புலனாய்வு பிரிவில் இருந்து நீக்க உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

அந்த கோரிக்கையை இன்று நிராகரித்த நீதிமன்றம், விசாரணை நடவடிக்கைகளை வேறு பிரிவுக்கு மாற்றுவதற்கான உத்தரவினை விடுக்க, நீதிமன்றத்திற்கு சட்டத்தின் பிரகாரம் இடமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 11 இளைஞர்களும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம்  தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படடையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.
 
இந்த வழக்கில் தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள  கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர்டீ.கே.பி திஸாநாயக்க உள்ளிட்ட 7 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
2008 – 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர்டீ.கே.பி தஸநாயக்க உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips