பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் ஏனைய வழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டும்

Saturday, 24 February 2018 - 7:04

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் ஏனைய வழிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டும் என மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹூஸைன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பது தொடர்பான, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், ஷெய்ட் ராட் அல் ஹூஸைனின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, தொடர்ந்தும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என ஆணையாளர் ஹுஸைன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குழுவொன்று ஜெனிவா செல்லத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்ட பீட தலைவரும், சிரேஸ்ட விரிவுரையாளருமாக குமாரவடிவேல் குருபரன் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips