இன்று வழங்கப்படவுள்ள அமைச்சு பதவிகள்..!!

Sunday, 25 February 2018 - 8:06

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21%21
அமைச்சரவை சீர்த்திருத்தம் இன்று இடம்பெறவுள்ளதாக முக்கியமான அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பல அமைச்சுக்களிலும் அமைச்சுக்களின் பரப்புக்களிலும் பல மாற்றங்கள் ஏற்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை சீர்த்திருத்தம் இதுவாகும்.

உயர்கல்வி, அரச நிறுவன அபிவிருத்தி அமைச்சுக்கள் உட்பட்ட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் ஏற்படும் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டபோதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரால் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, அமைச்சர்களான எஸ்.பி திசாநாயக்க, விஜித் விஜேமுனி சொய்சா, தயாசிறி ஜெயசேகர, ஹரின் பெர்னான்டோ ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
 
அதேவேளை, அமைச்சர்களான திலக் மாரப்பன, காமினி ஜெயவிக்ரமசிங்ஹ, ஆகியோரல் வகிக்கப்படும் வெளிநாட்டலுவல்கள், மற்றும் வனஜீவராசிகள் அமைச்சுக்கள் வேறு அமைச்சர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அஜித் பீ பெரேரா, ஹர்ஷ டீ சில்வா உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள் சிலருக்கு கபினட் அல்லாத அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவின் கீழுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வேறொருவரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips