Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21%21
Tuesday, 13 March 2018 - 20:09
சவூதியில் இலங்கை பணிப்பெண்ணை கொலை செய்தவர் தொடர்பில் வௌியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!
3,719

Views
சவூதி அரேபியாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் பூதவுடலை நாட்டுக்கு கொண்டுவருதற்குத் தேவையான நடவடிக்கைகளை நாளைய தினம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சவூதியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அவரின் மரண விசாரணைகள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக, பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அல் ராஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பிரியங்கா ஜெயசங்கர் என்ற பணிப் பெண், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சவூதிக்கு பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.

சவூதி அரேபியாவின் புரைடா பகுதியில் உள்ள வீடொன்றில் பணியாற்றிய அவரை, அவரது தொழில் வழங்குநர் கடந்த சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

பின்னர், அவர் குறித்த துப்பாக்கியால் தம்மைத் தாமே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,785 Views
17,145 Views
205 Views
1,328 Views
118 Views
45,536 Views
Top