Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Tuesday, 13 March 2018 - 21:07
கோட்டா பிராந்திய மக்கள் அனுபவிக்கும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தல்
98

Views
சிரியாவின் கிழக்கு கோட்டா பிராந்திய மக்கள் அனுபவிக்கும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு, ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த பகுதியில் சிரிய அரசாங்கப் படையினர் தொடர்ந்து 3 வாரங்களுக்கு மேலாக வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ரஷ்யாவின் பின்புலத்துடன் சிரிய படையினர் தரைவழியாகவும் கிழக்கு கோட்டாவின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்காக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுவரையில் 1022 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக, சிரியாவில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அங்கு மோதல் தவிர்ப்பை அமுலாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், அவை வெற்றியளிக்கவில்லை.

இந்த சூழ்நிலை குறித்து தாம் கடுமையாக வருத்தமடைவதாக, அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட வேண்டும்.

சிரிய மக்களது துயரத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அங்கு இடம்பெறும் மோதல்களுக்கு விரைவான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
8,818 Views
23,054 Views
5,458 Views
9,750 Views
1,349 Views
55,957 Views
Top