Hirunews Logo
%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%21%21
Wednesday, 14 March 2018 - 19:03
கணவரை கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் இன்று வழங்கிய தண்டனை!!
21,079

Views
தனது கணவரை கழுத்தறுத்து கொலை செய்த பெண்ணொருவருக்கு இன்று பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபரால் தொடரப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்தவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அங்குலானை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ம் ஆண்டு இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முதலில் அவர் தற்கொலை செய்துக்கொண்டார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் , பிரேத பரிசோதனையின் போது அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதன்படி , குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபருக்கும் மதுகம பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி , பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டமையினால் இன்று நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,288 Views
7,644 Views
671 Views
3,328 Views
160 Views
34,320 Views
Top