Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Wednesday, 14 March 2018 - 19:48
அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
146

Views
இலங்கை தமிழ் குடும்பம் ஒன்றை நாடுகடத்தும் நோக்கில், அவுஸ்திரேலியாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை மீறி செயற்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் பென் ஹிலியர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகிய கணவன் மனைவியும், அவரர்கள் இரண்டு பிள்ளைகளும் வீசா காலம் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்து நாடுகடத்தப்படவிருந்தனர்.

எனினும் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாடுகடத்தல் உத்தரவு பிற்போடப்பட்டுள்ளது.

நடேசலிங்கத்தின் வீசா காலாவதியாகியுள்ள போதிலும், பிரியாவின் வீசா இந்த மாதம் 4ம் திகதியே நிறைவடைந்துள்ளது.

இந்த காலத்தை நீடித்து புதிய வீசாவை வழங்குவதற்கு அதிகாரிகள் இணங்கி இருப்பதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இதனைக் கருத்திற்கொள்ளாமல் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களை நாடுகடத்த முற்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அவர்களது வீசா நீடிப்பு கோரிக்கை தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் முதல்வாரத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அதுவரையில் அவர்கள் அவுஸ்திரேலியாவிலேயே தங்கி இருக்க முடியும்.

இதேவேளை அவர்கள் குடும்பமாக நாடுகடத்தப்படுவதற்கு எதிராக, அவர்கள் வசித்து வந்த குயின்ஸ்லாந்தின் பிலோயிலா நகர மக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

மேலும் அவர்களுக்கு ஆதரவாக இணையத்தளத்தின் ஊடாக நடத்தப்பட்ட கையெழுத்து திரட்டும் போராட்டத்தில், 65 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,288 Views
7,644 Views
671 Views
3,328 Views
160 Views
34,320 Views
Top