Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B%21%21
Wednesday, 14 March 2018 - 19:52
கொழும்பு குப்பை பிரச்சினைக்கான காரணம் இதோ!!
1,155

Views
கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஒரு வாரகாலமாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மாளிகாகந்த, மருதானை, தெமட்டகொட ஆகிய பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, காணி அபிவிருத்தி செய்யும் கூட்டுதாபனத்திற்கு சொந்தமான குப்பை கொட்டும் பகுதிகளில் வகைப்படுத்தப்படாத குப்பைகளை பொறுப்பேற்கும் பணி கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குப்பைகளை வகைப்படுத்தாது கையளிப்பதே இந்த பிரச்சினைக்கான காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த குப்பை பிரச்சினை காரணமாக நகர மக்கள் மற்றும் கொழும்பிற்கு பிரவேசிக்கும் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை வகைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்ற குப்பைகளையும் எடுத்து செல்ல குப்பை திரட்டுபவர்கள் மறுத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,288 Views
7,644 Views
671 Views
3,328 Views
160 Views
34,320 Views
Top