Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 20:27
கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை காணவில்லை - தேடும் பணிகள் தீவிரம்
463

Views
முல்லைத்தீவு - நாயாற்று பகுதியில் கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போனோரை தேடும் பணிகளில் சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எமது முல்லைத்தீவு பிராந்திய செய்தியாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிலாபத்தினை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான மில்ராஜ் மிரண்டா, 48 வயதான இமானுவேல் மிரண்டா மற்றும் 24 வயதுடைய மிதுறதன் மிரண்டா ஆகிய மூன்று பேர் கடந்த 12ம் திகதி அதிகாலை கடலுக்கு சென்றுள்ளனர்.

நண்பகல் அளவில் கரை திரும்புவதாக தெரிவித்து சென்றிருந்தாலும், அன்று இரவு வரையில் திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகளை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியிருந்தார்

விமானப்படையினரின் உலங்கு வானூர்திகள் இன்று காலை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தேடலில் ஈடுபட்ட போதும், மீனவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை.

எவ்வாறாயினும் காணாமல் போன மீனவர்களை கடற்ப்படையினர் தொடர்ந்தும் தேடிவருவதோடு, சுழியோடிகள் கடலில் தேடிதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு அவர்களது குடும்பத்தாரும், ஏனைய மீனவர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
6,700 Views
16,896 Views
1,968 Views
1,098 Views
65 Views
45,244 Views
Top