இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக சீ ஜின்பின்

Saturday, 17 March 2018 - 15:08

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95++%E0%AE%9A%E0%AF%80+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
சீன ஜனாதிபதி சீ ஜின்பின் அந்நாட்டு நாடாளுமன்றத்தினால், இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைநகர் பீஜிங்கில் இன்று இடம்பெறும் கமீயூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு நெருக்கமானவராக கருதப்படும் வேங் குய்ஷான் உப ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஜனாதிபதி சீ ஜின்பிங் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமை எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளபோதும், முன்னாள் ஊழல் எதிர்ப்பு அரசியல்வாதியான வாங் குய்ஷான் நியமனமானது எதிர்ப்பார்க்கப்படாத ஒன்று என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சீன நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில், சீ ஜின்பிங்கின் நியமனத்துக்கு ஆதரவாக 2 ஆயிரத்து 970 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
 
முன்னதாக கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் 2 ஆயிரத்து 952 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

சீன ஜனாதிபதி பதவி ஒருவர் இரண்டு தடவைகள் பதவி வகிக்க முடியும்.

இந்த நிலையில், சீ ஜின்பிங் உயிர் வாழும்வரை அந்தப் பதவியில் நீடிக்கும் வகையில் அரசியலமைப்பை மறுசீரமைப்பு செய்ய கட்சியின் மாநாட்டில் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 
 
 
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips