சகோதரருடன் விளக்கமறியலுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த

Monday, 19 March 2018 - 12:41

%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரின் சகோதரரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகியோர் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆராச்சிகட்டுவ பிரதேச செயலாளருக்கு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலேயே இன்று இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சிலாபம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

2008ஆம் ஆண்டு ஆராச்சிகட்டுவ பிரதேச செயலாளருக்கு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகத்திற்குரியவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் பிரதித் தலைவர் ஜயந்த சமரவீர ஆகியோரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலையாகாத நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள அலுவலகத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், கருவாத் தோட்ட காவல்துறையினரால் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையாளர் செய்த் ராட் செய்ட் அல் ஹூசைன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips