அனைவரும் எதிர்பார்த்த கொழும்பு மாநகர சபை நகராதிபதியின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு

Monday, 19 March 2018 - 14:01

%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
15 உள்ளுராட்சி சபைகளுக்காக முதல்வர்கள், உதவி முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்கள் ஆகியோரின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மாநகரசபையின் முதல்வராக ரோசி சேனாநாயக்கவும், பிரதி மாநகர முதல்வராக மொஹமட் இக்பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலிய மாநகர சபையின் முதல்வராக கருணாரட்ன பகலவங்கே டொன் சந்தனலால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதி மாநகர முதல்வராக யதர்சனா புத்திரசிகாமணி நியமனம் பெற்றுள்ளார்.

நோவூட் பிரதேச சபையின் தலைவராக தங்கராஜ் கிஷோர்குமாரும் பிரதி தலைவராக காளிமுத்து சிவசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையின் பிரதேச தலைவராக மருதையனார் ஜயகாந்தனும், பிரதி தலைவராக குணசீலன் கிளாரன்ஸ்சும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - பூனகிரி பிரதேச சபையின் தலைவராக அருணாசலம் ஐயம்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, பிரதி தலைவராக சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் தெரிவாகியுள்ளார்.

முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு பிரதேச சபையின் தலைவராக செல்லையா பிரேமகாந்தும் பிரதி தலைவராக கனகசுந்தரசுவாமி ஜனமேயன்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல, அம்பாறை – அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராக அத்தாவுல்லா அகமட் சஹீயம் பிரதி முதல்வராக அப்துல் கபூர் அஸ்மியும் தெரிவாகியுள்ளனர்.

திருகோணமலை – வெருகல் பிரதேச சபையின் தலைவராக கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதி தலைவராக தேவநாயகம் சங்கர் தெரிவாகியுள்ளார்.

இதனிடையே பண்டாரவளை மாநகர சபையின் முதல்வராக நலின் பிரியந்த சூரியகேயும் பிரதி முதல்வராக ஜனக்க நிஷாந்த ரட்நாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, கொலனாலை, மஹரகம, வத்தளை-மாபொலை, பாணந்துறை, பேருவலை மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய நகர சபைகளினதும் பிரதானிகளது பெயர் விபரங்களும் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.



  


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips