காதலுக்கு மறுப்பு தெரிவித்தார் விக்கினேஷ்வரன்

Friday, 23 March 2018 - 13:32

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்று அரசாங்கம் கூறுவது தமிழ்ப் பேசும் மக்களை அரசாங்கம் காதலிக்க கோருவதற்கு நிகரானது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்தம் செய்தியாளர்களது ஒரு கேள்விக்கு பதில் வழங்கி அவரால் வெளியிடப்படுகின்ற ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கோரும் படி இந்த காதலை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டால் பல பரிசுகளைத் தருவார்கள் கேட்பதை எல்லாம் வாங்கித் தருவார்கள்.

ஆனால் மெதுவாக தமிழ் மக்களிடம் இருப்பதையும் பறித்துக் கொள்வார்கள்.

கடைசியில் திருமணம் முடிக்க முடியாது என்று கைவிரித்து விடுவார்கள் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார விருத்தி கண்டு நாம் ஏமாந்துவிட்டால்இ வடக்கைத் தமக்கு அடிபணியச் செய்து எமது வளங்களைச் சூறையாடி பலவந்த குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி கடைசியில் அரசியல் உரிமைகள் எவற்றையும் தராமல் விட்டுவிடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips