Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
Tuesday, 10 April 2018 - 12:52
ஐக்கிய தேசிய கட்சியின் விருப்பம் ஜனாதிபதிக்கு அறிவிப்பு
1,438

Views
பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படத் தயார் என ஜனாதிபதியிடம் கூறியதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்களுடன் தமக்கு தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

எனினும், அரசாங்கத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதமருக்கு எதிராக வாக்களிப்பது என்பது, அரசாங்கத்தில் இருப்பதன் தார்மீகத்துக்கு புறம்பானதாகும்.

இந்த நிலையில், வாக்கெடுப்பை புறக்கணித்தவர்களை இணைத்துக்கொணடு ஆட்சி அமைத்து புதிய பயணத்தை தொடருவோம் என ஜனாதிபதியிடம் கூறியதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி என்றும், ரணில் விக்கிரமசிங்க பிரதமர் என்றும் தேர்தலின்போது குறிப்பிடப்பட்டது.

அதற்கான மக்கள் ஆணை கிடைத்தது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,397 Views
10,935 Views
704 Views
6,711 Views
111 Views
38,926 Views
Top