எதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு

Friday, 20 April 2018 - 22:00

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தென் கிழக்கு வெப்ப மண்டல மாழைக்காடுகளில் புதிய 15 வகையான எறும்பு இனங்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

அவற்றில் மிக அபூர்வமான வகையிலான எறும்பொன்றும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகையான எறும்புகள் தங்கள் கூட்டத்தை பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்வதை அவதானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

'கோலோபோசிஸ் எக்ஸ்ப்லோடன்ஸ்' என்ற இந்த வகை எறும்புகள் ஏனைய பூச்சி இனம் தங்களை தாக்க வரும் போது ஒரு வித திரவத்தை வெளிப்படுத்துகின்றது.

நச்சு தன்மை கொண்ட இந்த திரவம் ஏனைய பூச்சி வகைகளை கொல்லும் திறனை கொண்டுள்ளது.

ஆனால், இந்த திரவத்தை வெளிப்படுத்துவதற்கு, இந்த எறும்புகள் தமது முழு சக்தியையும் பிரயோகிக்க வேண்டியுள்ளதனால் அவற்றின் உயிர் பிரிகின்றன.

இந்த அபூர்வ வகையான எறும்பு போர்னியோ தீவுப்பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips