Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AA+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
Thursday, 17 May 2018 - 7:53
வெலிமக பிரதேச சபையின் தலைவர் உப தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது
1,355

Views
வெலிகம – பொல்அதுமோதர பாலம் திறப்பின் போது ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், வெலிகம பிரதேச சபையின் தலைவர் புஷ்பகுமார பெட்டகே உள்ளிட்ட 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று வெலிகம காவல்நிலையத்தில் முன்னிலையான வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வெலிகம பிரதேச சபையின் உபதலைவரும் உள்ளடங்கும் நிலையில், ஏனையவர்கள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணியின், பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி அமைச்சர் சாகல ரத்நாயக தலைமையில் இடம்பெற்ற குறித்த பாலம் திறக்கும் நிகழ்வின் நிறைவில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,261 Views
18,857 Views
509 Views
3,509 Views
125 Views
48,099 Views
Top