Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%2F+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%21
Thursday, 17 May 2018 - 11:17
மருத்துவர்களின் பணிபகிஷ்ரிப்பு / மலையகத்தில் நோயாளர்கள் சிரமம்!
1,372

Views

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடளாவிய ரீதியாக உள்ள மருத்துவமனைகளின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பல மருத்துவமனைகளுக்கு வெளிநோயாளர்கள் பிரிவுகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளர்கள், மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்ததாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில மருத்துவமனைகளில் இன்று காலை சில மருத்துவர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர்.

இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அட்டன் டிக்கோயா ஆதார மருத்துவமனைக்கு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.

எனினும் நோயளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடதக்கது.

சில மருத்துவமனைகளில் மாத்திரம் மருத்துவ சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை மேலும் குறிப்பிடதக்கது.Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,261 Views
18,857 Views
509 Views
3,509 Views
125 Views
48,099 Views
Top