Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+12%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%21%21
Thursday, 17 May 2018 - 12:18
தற்கொலை செய்துக்கொண்ட மாணவன் 12ஆம் வகுப்பு பரீட்சையில் பெற்ற வியக்கவைக்கும் மதிப்பெண்!!
8,236

Views
தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த மாணவன் தினேஷ் 12ம் வகுப்பில் பரீட்சையில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

தமிழகம் - நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் நல்லசிவன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு பரீட்சை எழுத்தியிருந்த நிலையில் கடந்த மாதம் தற்கொலை செய்துக்கொண்டார்.

கூலித்தொழிலாளியான இவரது தந்தை மாடசாமி, தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தந்தையின் செயல்களால் மனமுடைந்த மாணவர் தினேஷ், வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரை பல்வேறு பகுதிகளில் குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழி சாலை தொடரூந்து மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் மாணவர் தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவர் இறந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பையில், நீட் தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டு, 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், இறப்புக்கு முன் எழுதி வைத்த கடிதம் ஆகியவை இருந்தன.

மேலும், இனிமேல் குடிக்ககூடாது என தமது தந்தையை கேட்டுக்கொண்ட அவர், அப்போதுதான் தமது ஆன்மா சாந்தி அடையும் என கடிதத்தில் மாணவர் தினேஷ் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. அதில், மாணவன் தினேஷ் நல்லசிவன் 1024 மதிப்பெண்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் எடுத்துள்ள மதிப்பெண் விபரம்:


தமிழ்          - 194
ஆங்கிலம்   - 148
இயற்பியல் - 186
வேதியியல் - 173
உயிரியல்   - 129
கணிதம்     - 194
மொத்தம்   - 1024

இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற மாணவர் தற்போது உயிருடன் இல்லை என்பது அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஒரு பெரிய இழப்பாக கருதப்படுகிறது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
9,618 Views
25,776 Views
9 Views
13,512 Views
159 Views
60,189 Views
Top