Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 17 May 2018 - 12:56
எச்சரிக்கை..! மழை வீழ்ச்சியில் அதிகரிப்பு
886

Views
நாட்டை அண்டிய வளிமண்டல குழப்பநிலை காரணமாக நிலவும் மழையுடனான காலநிலையில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மத்திய , சப்ரகமுவ , தென் , ஊவா , மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழச்சி பதிவாகக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் , கொழும்பு தொடக்கம் காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோமீற்றர் வரை திடீரென அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் குறித்த வான்கதவுகள் ஒரு அடி அளவு திறக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,485 Views
5,792 Views
431 Views
831 Views
32 Views
30,242 Views
Top