Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
Thursday, 17 May 2018 - 20:02
மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் - நோயாளர்கள் அசௌகரியத்தில்
2,371

Views
சிங்கப்பூர் - இலங்கைக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பால் நாடளாவிய ரீதியிலான மருத்துவமனை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன.

பணிப்புறக்கணிப்பால் மாதாந்த மருத்துவ பரிசோதனை மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளின் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, சத்திரச் சிகிச்சை, அவரச சேவையுடன் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 8.00 மணியளவில் ஆரம்பமான இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு மற்றும் சிங்கப்பூர் - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அவர், இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,289 Views
19,007 Views
12 Views
3,673 Views
153 Views
48,286 Views
Top