Hirunews Logo
%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%3A+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
Thursday, 17 May 2018 - 19:48
டொலரின் பெறுமதி அதிகரிப்பு : அச்சமடையத் தேவையில்லை
930

Views
அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதால் டொலரின் பெறுமதி அதிகரித்து ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்நிய செலாவணி கையிறுப்பில் 9 ஆயிரம் மில்லியன் டொலர் உள்ளது.

இந்த வருட இறுதியில் 11 ஆயிரம் மில்லியன் டொலராக இருக்கும்.

இந்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்தே கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
News Image
Hiru News Programme Segments
7,289 Views
19,007 Views
12 Views
3,673 Views
153 Views
48,286 Views
Top