Hirunews Logo
%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Friday, 18 May 2018 - 8:52
எதிர்காலம் குறித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளக்கூடிய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்
46

Views
தமிழ் மக்கள் தங்களது எதிர்காலம் குறித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளக்கூடிய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று, பிரித்தானியாவின் தொழில்கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய கட்சியின் தலைவர் ஜெரமி கோபன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நீதியை நிலைநாட்டவும் முக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்காக எதிர்காலத்தில் தொழிற்கட்சி அரசாங்கம் அழுத்தங்களைக் கொடுக்கும்.

அத்துடன் யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, சர்வதேச நீதிபதிகள் அடங்கிய பொறிமுறை உருவாக்கப்படுவதும் கட்டாயமாகும்.

மேலும் பயங்கரவாத தடை சட்டம் நீங்கப்படுதல், காணி விடுவிப்பு முக்கியமாக அரசியல் தீர்வு வழங்குதல் போன்ற விடயங்களில் பிரித்தானிய அரசாங்கமும், சர்வதேச சமுகமும் இலங்கைக்கு கடும் அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்றும் ஜெரமி கோபன் வலியுறுத்தியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top