Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21%21
Friday, 18 May 2018 - 11:20
திரையுலகை உலுக்கியுள்ள செய்தி..!!
7,603

Views

எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தெலுங்கு திரைப்பட வசன எழுத்தாளரும், இயக்குனருமானவர் ராஜசிம்ஹா. 

அவர் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிடத்தக்கது அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி.

ருத்ரமாதேவி படத்தில் தெலுங்கானா ஸ்லாங்படி பேச அல்லு அர்ஜுனுக்கு பயிற்சி அளித்தவர் ராஜசிம்ஹா.

சந்தீப் கிஷன், நித்யா மேனனை வைத்து ஒக்க அம்மாயி தப்ப என்ற படத்தை எடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தார் ராஜசிம்ஹா.

இந்த படத்தை அடுத்து அவர் புதுப்படத்தை எடுப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.

அண்மையில் ராஜசிம்ஹா கன்னட திரையுலகில் கதை எழுதுபவராக அறிமுகமானார். அவர் தமிழ் திரையுலகிற்கும் செல்வதாக இருந்தது. இந்நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ராஜசிம்ஹா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மும்பையில் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சினிமா தொழில் தொடர்பான பிரச்சனைகளால் ராஜசிம்ஹா கடந்த ஓராண்டு காலமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில் தான் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

மன அழுத்தத்தால் திரையுலக பிரபலங்கள் தற்கொலை செய்வது புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்கொலை முயற்சி

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
மலையகத்தில் சீரற்ற காலநிலை
Wednesday, 15 August 2018 - 11:13
மேல் கொத்மலை நீர் தேக்கம் மேல் கொத்மலை நீர் தேக்கம் போக்குவரத்து... Read More
News Image
Hiru News Programme Segments
6,018 Views
13,733 Views
144 Views
883 Views
176 Views
41,888 Views
Top