Hirunews Logo
+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Friday, 18 May 2018 - 13:23
மழையுடனான காலநிலை தொடரும்
1,457

Views
நாட்டை சூழவுள்ள தாழ்வான வளி மண்டளத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக, மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளி மண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 
அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதற்கமைய இன்றைய தினம் மத்திய, சம்பரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து வீசும் காற்று காரணமாக இலங்கை வான்பரப்பை அண்டி தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக, வளிமண்டளத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதிலும் மழையுடனான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
அத்துடன், இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகளவிலான மழை வீச்சி கொழும்பு – கோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,440 Views
5,711 Views
303 Views
672 Views
19 Views
30,062 Views
Top