Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88++%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Friday, 18 May 2018 - 13:35
நீதியை நிலைநாட்ட கால தாமதம் இன்றி தலையிட வேண்டும்
7,784

Views
சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை  நிலைநாட்ட  சர்வதேச சமூகமானது காலதாமதம் இன்றி தலையிட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.
 
இதில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
 
யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
 
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் தம்மாலான உதவிகள் வழங்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் கோரியுள்ளார்
 
இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் பொது சுடரை ஏற்றி வைத்தார்.
 
இதனையடுத்து, யுத்தத்தின் போது உயிர்நீத்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறவினர்கள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
 
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வடக்கு முதலமைச்சர்
 
இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு இணையாக இன்று வவுனியா மற்றும் மன்னாரில் நிகழ்கள் நடத்தப்பட்டன.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
News Image
Hiru News Programme Segments
3,440 Views
5,711 Views
303 Views
672 Views
19 Views
30,062 Views
Top