அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்ய சீனா இணக்கம்

Sunday, 20 May 2018 - 13:04

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88++%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்க பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்ய சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில வாரங்களாக வாத பிரதிவாதங்களுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளை அடுத்து இது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
இதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளும் இணைந்து நேற்று அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
 
எப்படியிருப்பினும், எந்த முறைமையின் கீழ் இந்த இறக்குமதி அதிகரிக்கப்படும் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
 
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனையே வாஷிங்டனில், சீன உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தார்.
 
உலகின் இரு முக்கிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக முரண்பாடு கணிசமான அளவு குறைவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips