எத்தியோப்பிய கைதிகள் ஆயிரம் பேரை விடுவிக்க சவுதி இணக்கம்

Sunday, 20 May 2018 - 20:31

%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
எத்தியோப்பிய கைதிகள் ஆயிரம் பேரை விடுவிப்பதற்கு சவுதிஅரேபியா இணங்கியுள்ளது.

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் சவுதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட், இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சவுதி சென்றுள்ள நிலையில், அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவே, சவுதி அதற்கு இணக்கியுள்ளது.

இதேவேளை ஐந்து லட்சத்திற்கும் அதிகமான எத்தியோப்பியர்கள் சட்டவிரோதமாக சவுதியில் தங்கியுள்ளனர்.

அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கடந்த வருடம் 14 ஆயிரம் எத்தியோப்பியர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips