சோமாலியாவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பலர் பலி

Monday, 21 May 2018 - 19:33

%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான சூறாவளியுடனான மழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 பேர் பலியாகியுள்ளனர்.

சோமாலியாவில், கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் கனமழையுடனான பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கால நிலை சீர்கேடு காரணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் மேலும் 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பாதுகாப்பான தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

பயிர்செய்கைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளதனால் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சோமாலியா சந்தித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையும், சோமாலிய அரசாங்கமும் இணைந்து உலக நாடுகளின் உதவியை கோரியுள்ளது.

இந்த நிலையில், இந்திய வடமாநிலமான திரிப்புராவில் கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டுள்ள பாரிய மழை காரணமாக பெரு வெள்ளம் காரணமாக ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

3 ஆயிரம் குடும்பங்கள் நீர் சூழ்ந்த நிலையில், பாதிக்கப்பட்ட பிரதேசத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் 36 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள மூன்று நதிகளின் மட்டம் அபாய நிலையை எட்டியுள்ளதுடன், பல மண்சரிவு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இது தவிர, அசாம் - அகர்த்தலா தேசிய நெடுஞ்சாலையின் சில பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips