குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கத்தோலிக்க பேராயர்!!

Tuesday, 22 May 2018 - 19:46

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%21%21
சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றங்களை மறைத்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த கத்தோலிக்க பேராயர் ஒருவரை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று குற்றவாளியாக அடையாளம் கண்டுள்ளது.

ஃபிலிப் வில்சன் என்ற அவர், இவ்வாறான குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அதியுயர்மட்ட கத்தோலிக்க பாதிரியாராக பதிவாகியுள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகி என்று அடையாளம் காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜேம்ஸ் ஃப்லெச்சர் என்ற பாதிரியார் குறித்த விபரங்கள் எவையும் தமக்கு தெரியாது என்று அண்மையில், அவர் நியுசவுத் வேல்ஸ் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த பாதிரியாரால் 1976ம் ஆண்டு துஸ்பிரயோகத்துக்கு உள்ளான ஒருவர், அந்த காலப்பகுதியிலேயே துஸ்பிரயோகத்துக்கு உள்ளான விபரங்களை பேராயர் ஃபிலிப் வில்சனிடம் தெரிவித்ததாக சாட்சி வழங்கினார்.

இந்தநிலையில் பேராயர் இந்த குற்றங்களை மறைத்தமை உறுதியாகி இருப்பதாக இன்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எனினும் பேராயர் தரப்பில் இந்த குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தயாராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips