பல அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் அபிமானத்தை வென்ற நீதிபதி மா இளஞ்செழியன் விடைப்பெற்றார்! (படங்கள்)

Thursday, 24 May 2018 - 11:33

%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
நாடே திரும்பிப்பார்க்குமளவிற்கு பல அதிரடியான தீர்ப்புக்களை வழங்கிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா இளஞ்செழியன் நேற்று கண்ணீருடன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து விடைப்பெற்றார்.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக எதிர்வரும் 28ஆம் திகதி முதல் இளஞ்செழியன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அரச சட்டவாதிகள் நாகரட்னம் நிஷாந்த், திருமதி பிரிந்தா ரெஜிந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து வாழ்த்துப் பாமலை மற்றும் நினைவுச் சின்னம் என்பன இதன்போது வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நலன்புரிச் சங்கம் சார்பில் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் இதனை வழங்கி வைத்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக எதிரவரும் 28ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.

“யாழ். மண்ணை நேசித்தேன். யாழ். மண்ணை சுவாசித்தேன். ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது.

மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப் பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறு இந்நிகழ்வின் போது கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தினார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.



 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips