ஈ.டி.ஐ வாடிக்கையாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

Thursday, 24 May 2018 - 15:26

%E0%AE%88.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%90+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
ஈ.ஏ.பி கூட்டு வியாபாரத்துக்கு சொந்தமான ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தில் பணம் வைப்பிலிட்ட வாடிக்கையாளர்கள் குழுவொன்று இன்றும் பொரளை - வோட் பிரதேசத்ிதல் அமைந்துள்ள குறித்த நிறுவத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஈ.டி.ஐ நிறுவனம் குறித்த வாடிக்கையாளர்களின் சேமிப்பு தொகையை மீள செலுத்தாமல் தவிர்த்து வந்துள்ளமை தொடர்பில் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பதிவாகியிருந்த நிலையில் , வாடிக்கையாளர்கள் குறித்த நிறுவனத்திற்கு வந்த போதெல்லாம் நிறுவனத்தின் அதிகாரிகள் அவர்களை தவிர்த்து வந்துள்ளதை தொடர்ந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த வாடிக்கையாளர்கள் பொரளை - வோட் பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பில ்ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சந்தர்ப்பங்களில் நிறுவனத்தின் அதிகாரிகள் அவர்களின் வைப்பு பணத்தை மீள பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்த போது அவை இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

அதனடிப்படையிலேயே , வைப்பாளர்கள் இன்றும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ,எதிர்ப்பில் ஈடுபட்ட ஈ.டி.ஐ வைப்பாளர்கள் பின்னர் பேரணியாக விஜேரா மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் சென்று மீண்டும் எதிர்ப்பில ்ஈடுபட்டனர்.

இதன்போது , எதிர்ப்பாளர்களில் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒருங்கிணைப்புச் செயலாளரை சந்திந்து மனுவொன்றை கையளித்துள்ளனர்.

ஈ.டி.ஐ வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி தற்போதைய நிலையில் தேவையான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஒருங்கிணைப்புச் செயலாளர் இதன் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை , ஈ.ஏ.பி கூட்டு வியாபாரத்திற்கு சொந்தமான ஸ்வர்ணமால் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் மத்திய வங்கியின் அனுமதியின்றி பொதுமக்களின் வைப்புக்களை பெற்றுள்ளதாக நேற்று நாடாளுமன்றில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஈ.டீ.ஐ உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி தொட்ரபில் எதிர்வரும் மாதம் 5ம் திகதி நாடாளுமன்ற விவாதமொன்றை நடாத்த இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்க்பபட்டுள்ளது.





Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips