Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
Thursday, 14 June 2018 - 13:47
மகளுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்ககூடாது - பதறும் அம்மாவின் காணொளி
10,804

Views
"மகளை காணாமல் தேடும் போது கீழ் வீட்டில் இளைஞர்கள் மூவர் அமர்ந்திருந்தனர்"

"அவர்களில் ஒருவர் எனது வீட்டினை வந்து வேவு பார்ப்பதை போன்று பார்த்தார்."

"மகனுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அந்த இளைஞர்கள் சைனிஸ் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்."

"அப்போது எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றும் வந்தது. கெட்டவார்த்தையால் கூறி... உன்னுடைய மகளை கொன்று விடுவோம் என தெரிவித்தனர்"

எல்பிட்டி - ஊருகஸ் சந்தி பகுதியில் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தமையை தொடர்ந்து விசாரணைகள் வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

வழமையாக குறித்த யுவதி வேலை முடிந்து வீட்டிற்கு வரும் நேரம் கடந்த போதிலும் அன்றைய தினம் அவர் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த யுவதியின் தாயாரும் மகனும் சேர்ந்து மகளை தேடி வந்துள்ளனர்.

மகளை காணாமல் தேடும் போது கீழ் வீட்டில் இளைஞர்கள் மூவர் அமர்ந்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் எனது வீட்டினை வந்து வேவு பார்ப்பதை போன்று பார்த்தார்.

மகனுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அந்த இளைஞர்கள் சைனிஸ் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது குறித்த அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றும் வந்ததாகவும், கெட்டவார்த்தையால் கூறி... உன்னுடைய மகளை கொன்று விடுவோம் எனவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் குறித்த யுவதியின் அம்மா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் யுவதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும், பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் தொலைபேசி வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படும் யுவதி வேன் ஒன்றின் மூலம் பலபிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், வேனின் இலக்கத்தகடு வைத்தியசாலையின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இலக்கத்தினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து வேன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குறித்த யுவதியை காதலித்து வந்துள்ளார் எனவும், குறித்த நபர் திருமணமானவர் என தெரிந்ததும் யுவதி அவரின் காதலை நிராகரித்துள்ளார் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையிலேயே குறித்த யுவதியின் மரணம் விபத்தில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதோடு, திட்டமிட்டு கொலை செய்யபட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யுவதியின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அவரின் தாயார், மகளின் சம்பவத்தினை நினைத்து கதறி அழும் காணொளி கீழே தரப்படுகின்றது.


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,079 Views
20,833 Views
2,817 Views
6,765 Views
692 Views
52,304 Views
Top