Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 14 June 2018 - 13:58
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான போதைப்பொருட்கள் மும்பையில் மீட்பு
80

Views
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான போதைப் பொருட்கள் இந்தியாவின் மும்பை நகரில் மீட்கப்பட்டுள்ளன.

த ஹிந்து இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.

மும்பையில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட சோதனைகளின் ஊடாக 308 கிலோ போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய சுங்கப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவை 30 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியானவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் இந்தியாவில் மீட்கப்பட்ட பெருந்தொகையான போதைப் பொருள் தொகுதி இதுவென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேர் பிரித்தானியா மற்றும் தாய்லாந்து நாட்டவர்கள்.

அவர்கள் இலங்கை, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களது போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான விசேட விசாரணைகளை சுங்கப் புலனாய்வுப் பிரிவும் மும்பை காவற்துறையினரும் ஆரம்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.





Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
4,551 Views
8,256 Views
12 Views
4,173 Views
85 Views
35,554 Views
Top