Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
Thursday, 14 June 2018 - 14:37
பொருளாதாரத் தடை நீக்கப்படாது
111

Views
வடகொரியாவிற்கு எதிரான எந்த பொருளாதாரத் தடையும், அந்த நாடு அணுவாயுத நடவடிக்கைகளை கைவிடும் வரையில் நீக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
 
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜொஹ் உன் ஆகியோருக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை அடுத்து, வடகொரியா மீதான பொருளாதார தடைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
 
ஆனாலும் உடனடியாக இது தொடர்பில் தீர்மானிக்க முடியாது என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
 
இதேவேளை, இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள காஸா பள்ளத்தாக்கில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டமை, குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
 
காஸா பல்லத்தாக்கில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டம் தொடர் நேற்று நடைப்பெற்றது.
 
இதன்போது இந்த உயிரிழப்புகளுக்கு ஹமாஸ் போராளிகளே காரணம் என, இஸ்ரேல் அரசாங்கத்திற்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது.
 
இதனையடுத்து இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் எதிராக 120 நாடுகள் வாக்களித்ததுடன், ஆதரவாக 8 நாடுகள் மாத்திரமே வாக்களித்தன.
 
45 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
 
மேலும், காஸா வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணமான இஸ்ரேல் அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top