Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88++%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 14 June 2018 - 14:55
கோட்டாவை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு
1,233

Views
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதையும், அவர் கைதுசெய்யப்படுவதையும் தடுத்து விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் ப்ரதீ பத்மன் சூரியசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர முதலான நீதியரசர்கள் முன்னிலையில் குறித்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின்போது நிதி மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போது சட்டமா அதிபரும், மனுதாரர் தரப்பினரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதுடன், வழக்கு விசாரணைகள் இடம்பெறும் கொழும்பு நீதவான் நீதிமன்றின் அறிவித்தல் கிடைத்தவுடன் அங்கு முன்னிலையாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மனு எதிர்வரும் 25 ஆம் திகதி தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top