Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%21%21
Thursday, 14 June 2018 - 16:06
இரண்டு வாரக் குழந்தையால் உயிர் பிழைத்த பெண்!!
1,178

Views
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து 2 வாரமே ஆன குழந்தையால், 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு தம்பதியருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகிய குழந்தை பிறந்தது.

ஆனால் அந்த குழந்தை 3 கிலோவிற்கும் குறைவாக இருந்ததால் அதன் உடல்நலம் குன்றியது. ஒருகட்டத்தில் அக்குழந்தை பரிதாபமாய் உயிரிழந்தும் போனது.

அதேநேரத்தில் 48 வயது பெண்மணி ஒருவர், சிறுநீரகங்கள் முற்றிலுமாய் செயலிழந்திருந்த நிலையில், உயிர் பிழைக்க மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருந்தார்.

இதனைப்பற்றி அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர், சற்றும் யோசிக்காமல் தங்கள் குழந்தையின் சிறுநீரகத்தை அந்த பெண்ணிற்கு தானம் செய்ய முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து குழந்தையின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டன.

இதைப்பற்றி கூறிய குழந்தையின் பெற்றோர், "எங்கள் குழந்தை இறக்கவில்லை, அது மற்றொருவருக்கு உயிர் அளித்திருக்கிறது" என்றனர். குழந்தையின் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
அழிவின் விழிம்பில் டோரிக் பங்களா!!
Monday, 10 September 2018 - 6:32
இலங்கையின் முதலாவது ஆளுநராக கருதப்படும் பிரித்தானிய பிரஜையான... Read More
News Image
Hiru News Programme Segments
6,583 Views
16,397 Views
1,515 Views
640 Views
231 Views
44,731 Views
Top