ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 38வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

Monday, 18 June 2018 - 7:59

%E0%AE%90.%E0%AE%A8%E0%AE%BE.+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+38%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

ஜெனிவாவில் இடம்பெறும் இந்த இந்த கூட்டத்தொடர் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்க உள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் கேள்விகளை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் இலங்கையிடம் கேள்வியெழுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

38வது கூட்டத்தொடருக்கு இந்த முறை இலங்கை சார்பில் விசேட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளாத நிலையில், ஜெனிவாவில் தங்கியுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த கூட்ட தொடரின் நிகழ்ச்சி நிரலின் இலங்கை தொடர்பான எந்தவிதமான உத்தியோகபூர்வ விவாதங்களும் உள்ளடக்கப்படவில்லை.

எனினும், இலங்கை தொடர்பான பல்வேறு உபக்குழு கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இந்த உப குழுக்கூட்டங்களை நடத்தி இலங்கை விவகாரம் தொடர்பில் உரையாற்றியுள்ளனர்.

கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் இலங்கை குறித்தும் கருத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 37வது கூட்டத்தொடர் நடைபெற்றது.

இதில் இலங்கை தொடர்பான இடைக்கால அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் முன்வைத்தார்.

அதன்படி, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் குறித்த இரண்டு வருடகால அவகாசம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips