சீனா மீது மேலும் அதிக வரியை அமுலாக்க ட்ரம்ப் தீர்மானம்

Tuesday, 19 June 2018 - 19:44

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
சீனாவிற்கு எதிராக மேலும் அதிக அளவான வரியை அமுலாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சீனாவின் பல உற்பத்திப் பொருட்களுக்கு 25சதவீத வரியை அமெரிக்கா அமுலாக்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக 200 பில்லியன் டொலர்களை சீனாவின் உற்பத்திகளுக்கு எதிராக அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன், இரண்டு நாட்கள் பயணமாக இன்று சீனா சென்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பு இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர், வடகொரிய தலைவரின் சீன பயணம் அமைந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை கலைவது குறித்து தம்மால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகள் உள்ளிட்ட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் சீனாவுடன் அவர் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips