பெசிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Friday, 22 June 2018 - 17:24

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கம்பஹா - மல்வானையில் மாளிகை ஒன்றை அமைப்பதற்கு அரச நிதியை பயன்படுத்தியமை தொடர்பாக பெசில் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போது நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த பெசில் ராஜபக்சவின் சட்டதரணிகள், உப்பாலி ஜயகொடி என்பவர் பூகொட மற்றும் மாத்தறை நீதிமன்றங்களில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலங்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதனை ஆராய்ந்த நீதிமன்றம், குறித்த ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான தகவல்களை குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினருக்கு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா, மல்வானை பகுதியில், நீச்சல் தடாகம் உட்பட பாரிய வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட்டு அங்கு பண்ணை ஒன்றை உருவாக்குவதற்கு அரச நிதியினை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips