குடும்பங்களை இணைக்கும் முயற்சியை மீண்டும் தொடர வடகொரிய , தென்கொரியா இணக்கம்

Saturday, 23 June 2018 - 8:03

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%2C+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கொரியப் போர் நடைபெற்றதன் பின்னர் வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே துண்டிக்கப்பட்டிருந்த குடும்பங்களை இணைக்கும் முயற்சியை மீண்டும் தொடர இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

கடந்த 1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போரில் பல இலட்சக் கணக்கானவர்கள் தங்கள் உறவினர்களிடம் இருந்து பிரிந்தனர்.

அவர்களில் பலர் மீண்டும் இணையும் முன்னரே இறந்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை பிரிந்தவர்கள் ஒன்றிணையும் சந்திப்பு நிகழ்வொன்று இடம்பெற உள்ளதாகவும், அதில் 100 பேரளவில் பங்கேற்க உள்ளதாகவும் இருநாட்டு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக கடந்த 2015 ஒக்டோபர் மாதம் இத்தகைய சந்திப்பு நிகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips