மகிந்தவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் - எதிர்க்கட்சி தலைவர்

Sunday, 24 June 2018 - 19:04

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மகிந்த ராஜபக்ஷவுடன் மீளவும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் தாம் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீவீ.விக்கினேஸ்வரனின் நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் இன்று வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் வெளியிட்டு வைக்க, முதலமைச்சரின் சகோதரி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது எதிர்கட்சி தலைவர் இதனை தெரிவித்தார்.

தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை கிட்டும்வரை அமைச்சுப்பதவிகளை பெறுவதென்பது பிரயோசனமற்ற விடயம்.

அரசியல் அமைப்பு விடயத்தில் தமிழர்களுக்கு தீர்வொன்றை பெற்று கொடுக்க சந்தர்ப்பம் இருக்குமாயின் அதில் முழுமையான ஈடுபாட்டை செலுத்துமாறு சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என, வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips