Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
Thursday, 12 July 2018 - 15:13
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் இன்று யாழில்...
57

Views
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் நளின் பண்டார, காவற்துறை மா அதிபர் பூஜீத் ஜெயசுந்தர ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக தற்போது யாழ்ப்பாணத்தில், விசேட காவற்துறை சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அவர்கள் இன்று அங்கு சென்றுள்ளனர்.

தற்போது, அவர்கள் காவற்துறை உயர் அதிகாரிகளுடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், கலந்துரையாடல் இடம்பெறும் இடத்திற்கு ஊடகவியலாளர் அனுமதிக்கப்படவில்லை எனவும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலை தொடர்ந்து, அவர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர், மற்றும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top