Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 12 July 2018 - 16:18
முல்லைத்தீவில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பலர் காயம்
559

Views

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் இன்று(12) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் பலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஒன்று இன்று அதிகாலை 2.45 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் கூழாமுறிப்புக்கும் முள்ளியவளைக்கும்  இடைப்பட்ட பகுதியில் வீதியருகில் இருந்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது பேருந்தில் பயணித்த சுமார் 25 பயணிகளில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிறிய சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சில்லில் காற்று போனமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படும் அதேவேளை பேருந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்து  தொடர்பில் முள்ளியவளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த!!
Saturday, 27 October 2018 - 10:04
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More
News Image
Hiru News Programme Segments
8,014 Views
20,652 Views
2,622 Views
6,544 Views
613 Views
51,940 Views
Top