Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
Thursday, 12 July 2018 - 18:50
இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியா அக்கறையின்றி செயற்படுவதாக குற்றச்சாட்டு
73

Views
இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் விடயத்தில், இந்தியா அக்கறையின்றி செயற்படுவதாக, ட்ரம்பிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர்ந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் ஊடக அறிக்கை ஒன்றில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை தமிழ் மக்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதற்கு, இந்தியாவின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்று நம்பப்பட்டது.

ஆனால் தற்போது அந்த நிலை மாறிவரும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் மக்களது பிரச்சினைத் தீர்வுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி போதிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதாக தெரியவில்லை என்று அந்த அமைப்பு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
5,360 Views
10,729 Views
568 Views
6,605 Views
66 Views
38,769 Views
Top