ட்ரம்ப் - புட்டினுக்கு இடையிலான சந்திப்பு

Monday, 16 July 2018 - 17:06

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கும் இடையேயான நேரடி சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.

இரு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகள் அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் ரஷ்ய கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன.

இதற்கு அமைய மூன்றாவது நாடொன்றில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என்பதில் இணக்கம் காணப்பட்டது.

அதற்கு இணங்க ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பின்லாந்தில் தலைநகர் ஹெல்சின்கி  நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் ரஷ்ய தலைவரை சந்தித்து பேசியது இல்லை.

எப்படியிருப்பினும் ஜேமனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்ததுடன், தொலைபேசியின் ஊடாகவும் உரையாடியுள்ளனர்.

முதன் முதலாக இரு தலைவர்களும் தனியாக இன்று உரையாடவுள்ளனர்.

பின்னர் இரு நாடுகளின் பிரதிநிதிகள் தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips