பத்திரிகை நிறுவனங்கள் தொடர்பில் பிரதமர் கவலை

Saturday, 21 July 2018 - 7:18

%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88
பாடசாலை மாணவர்களுக்கு 13 வருட கட்டாய கல்வியை பெற்று கொடுப்பதற்கு எதிராக சில பத்திரிகை நிறுவனங்களினால் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பில் தாம் கவலை அடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வொன்று அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கல்வி முறையினால் பலருக்கு பாரிய நஷ்டங்கள் ஏற்படுகின்றன.

சாதாரண தரத்தின் பின்னர் பலர் தொழில் ரீதியான பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.

நாட்டின் மனித வளம் இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுவது அநீதியான விடயமாகும்.

நாட்டிற்கு பேராசியர்களை போன்றே பல்வேறு தொழில்துறைகளை சேர்ந்தவர்களும் அத்தியாவசியமானவர்களே.

கல்வியில் பின்னடைந்த பலரும் கலை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிறந்து விளக்குகின்றனர்.

அவர்களுக்கான பாதை அமைத்துக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கு பல முன்னணி ஊடகங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்ற போதும் சில ஊடகங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருதாக பிரதமர் இதன்போது கவலை வெளியிட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips